தலைகுப்புற கவிழ்ந்து சுக்கு நூறான பேருந்து! 15 பேர் துடிதுடித்து பலியான சோகம்!

வளைவில் திரும்பியபோது பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 14 பேர் பலியான சம்பவமானது நேபாளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளத்தில் காலின்சவுக் எனும் பகுதியில் பிரபல புனிதத்தலம் அமைந்துள்ளது. இங்கே இருந்து பக்தாபூர் எனும் நகருக்கு 40 பேர் கொண்ட பேருந்து சென்றுள்ளது. நேற்று காலை இந்த பேருந்து சிந்துபால்சவுக் எனும் பகுதிக்கு அருகேயுள்ள சுன்கோஷி இடத்தின் வழியாக சென்றுள்ளது. அங்கிருந்த ஆபத்தான வளைவில் பேருந்து திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகி சென்றுள்ளது.

இதனால் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நேபாளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.