24 மணி நேரம் இலவச பயணம்! பெண்களுக்கு உத்தரபிரதேச அரசு வழங்கிய புதிய சலுகை! ஏன் தெரியுமா?

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 மணிநேரத்திற்கு பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


முதல்வர் யோகி ஆதித்யநாத் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அந்த மாநில பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் வண்ணம் 24 மணிநேரத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு வரை  இந்த சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே அந்த மாநில பெண்களுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்படும் ரக்ஷா பந்தன் அரிசி என்று கூறியுள்ளார்  முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இதேபோல் கடந்த ஆண்டும் பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் கடந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு பெண்கள் இலவசமாக பயணம் செய்ய இயலும் என உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட இந்த விழாவானது சொந்த அண்ணன் தங்கைகளுக்கு  இடையே மட்டும் ஏற்படாமல் யார் என்று தெரியாத ஒரு நபருக்கு கூட கயிறு கட்டி கொண்டாடும் விழாவாக உள்ளது.

இத்தகைய பெருமைமிக்க விழாவிற்கு உத்தரப்பிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய தங்கைகளுக்கும் தன்னுடைய மகள்களுக்கும் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.