மலை உச்சியிலிருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 23 சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ள சம்பவமானது பெரு நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்! 23 பேர் ஸ்பாட் அவுட்! பதற வைக்கும் காரணம்!

பெரு நாட்டில் குஸ்பிசான்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. செவ்வாய்கிழமையன்று பெரு நாட்டில் அமேசான் மழைக்காடு பகுதியான புயர்த்தோ மல்டானாடோ என்ற நகரத்திலிருந்து சுஸ்கோ நகரத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் பேருந்து மலையுச்சியில் சென்றுகொண்டிருந்தபோது 100 அடி ஆழத்தில் திடீரென்று கவிழ்ந்து விழுந்தது. இந்த பேருந்தில் மொத்தம் 48 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் வந்த தகவல் படி 17 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெருநாட்டில் பெரிதளவில் மழை பெய்து வருவதால் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட சிரமப்பட்டு வருகின்றனர். பயணிகள் சிலர் பேருந்தில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய அறிக்கையில் 23 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்தபட்சம் மேற்பார்வையினாலும், மோசமான சாலை அமைப்பினாலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு மக்கள் கூறி வருகின்றனர். ஜூலை மாதம் நடந்த சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தும், 8 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவமானது பெரு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.