பர்ஸ்ட் கியருக்கு பதில் ரிவர்ஸ் கியரை போட்டு ஆக்சிலேட்டரை அழுத்திய டிரைவர்! பஸ் ஸ்டான்டில் ஏற்பட்ட விபரீத விபத்து!

பேருந்து திடீரென்று கட்டுபாடின்றி பிளாட்பார்முக்குள் புகுந்த சம்பவமானது செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்யாறு பேருந்து நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது. பள்ளி மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் ஆகியோர் தங்களுடைய பேருந்துக்காக நெடுநேரம் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு வரை வரும் டவுன் பஸ் பேருந்து நிலையத்திற்குள் வந்தது. ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்காக பின்னோக்கி ஓட்டிவந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து திடீரென்று பேருந்து விலகியது. எதிர்பாராவிதமாக பிளாட்பார்முக்குள் வேகமாக பேருந்து வந்தது. இதனால் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தோர் அலறி அடித்து ஓடினர்.

அதிர்ஷ்டவசமாக பேருந்து, பேருந்து நிலையத்தின் கம்பியின் மீது மோதியதால் தடைப்பட்டு நின்றது. மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். பேருந்து நிலையத்தின் கம்பிகள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்தன. பேருந்து நிலையம் கூரைகளும் தகர்க்கப்பட்டன. இந்த சம்பவத்தை குறித்து பேருந்து நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவமானது செய்யாறு பேருந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.