ஒரே நேரத்தில் 11 மாணவிகள்..! மினி பஸ் ஓட்டுனரின் விபரீத செயலாளல் ஏற்பட்ட பயங்கரம்! பதற வைக்கும் சிசிடிவி!

கன்னியாகுமரியில் மினி பேருந்து ஒன்று கல்லூரி மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைஈ பகுதியில் பழைய பாலம் செல்லும் வழியில், தேவிகுமாரி மகளிர் கல்லூரி உள்ளது. அந்த 11-ம் தேதி இந்த கல்லூரி மாணவிகள் கல்லூரி முடித்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலை ஓரமாக மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

பொதுவாகவே அந்த சாலை ஆனது சற்று குறுகளாக காணப்படுகின்றது. எப்போதுமே காலியாக இருக்கும் அந்த சாலையில் மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும்போது மற்றும் அவர்களின் வீடுகளுக்கு திரும்பும் போது மட்டும் சற்று நெரிசலாக காணப்படுவது வழக்கமாகும். அவ்வாறாக மாணவிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றபோது பள்ளி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. மாணவிகள் வருவதை பார்த்து ஓரமாக அந்த பேருந்தை ஓட்டுனர் நிறுத்திவிட்டார். 

இந்த பள்ளி பேருந்து எதிர் திசையில் மற்றொரு மினி பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. சுஜிதா என்ற நிறுவனத்தின் சார்ந்த மினி பேருந்தை விண்ராஜ்( வயது 25) ஓட்டுநர் இயக்கி வந்தார். இந்த மினி பேருந்து எதிர்திசையில் வந்த பள்ளி பேருந்தின் மீது மோதுவது போல் வந்தது. உடனே மினி பேருந்தின் ஓட்டுனர் செய்வதறியாது வேகமாக தனக்கு முன்னால் ஓரமாக சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகளின் மீது மோதி விட்டார். 

மினி பேருந்து ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் கல்லூரி மாணவி சுசித்ரா சிக்கிக்கொண்டார். இவர் ஆபத்தான சூழ்நிலையில் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 11 மாணவிகள் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

மாணவிகளிடம் ஹீரோயிசத்தை காட்டுவதற்காகவே வின்ராஜ் வேகமாக மினி பேருந்தை இயக்கிய தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தன் ஹீரோயிசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அப்பாவியான சுசித்ராவின் உயிருடன் விளையாடியிருக்கிறார் மினி பேருந்து ஓட்டுநர் என்பது மனதை பதைபதைக்க கூடிய ஒன்றாகும். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.