தேசிய நெடுஞ்சாலை! திடீரென கட்டுப்பாட்டை இழந்த SETC பஸ்! பயணிகளுடன் ஏரியில் பாய்ந்த விபரீதம்! விழுப்புரம் பரபரப்பு!

அரசு சொகுசு பேருந்து சாலையோரத்தில் நின்ற மரத்தின் மீது மோதி அருகே இருந்த ஏரியில் மூழ்கிய சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியிலிருந்து அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள போரூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். பேருந்தானது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர்-மடப்பட்டு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். 

சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மரத்தின் மீது மோதியருகே இருந்து ஆற்றுக்குள் பேருந்து புகுந்தது. ஓட்டுநர் ரமேஷுக்கும், ஆவுரை சேர்ந்த பயணியான பெருமாளுக்கும் இந்த விபத்தினால் படுகாயம் ஏற்பட்டது.

மேலும் விபத்து கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆற்றின் ஆழம் குறைவாக இருந்ததாலும், பேருந்தில் வெறும் 6 பயணிகளே இருந்ததாலும் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரேன் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய பேருந்தை மீட்டெடுத்தனர். இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.