முன்னால் மெதுவாக சென்ற லாரி! பின்னால் பிரேக்கிற்கு பதில் ஆக்சலேட்டரை அழுத்திய பஸ் டிரைவர்! சென்னையை உலுக்கிய கோரம்!

கன்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதியது சம்பவ இடத்திலேயே பேருந்து நடத்துநர் உயிரிழந்த சம்பவமானது பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்றிரவு 11 மணியளவில் மாதவரம் பணிமனையை நோக்கி "103-எம்" என்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த பேருந்து செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். நடத்துநராக பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த வீரமுத்து என்பவர் வந்தார்.

நள்ளிரவு 12:40 மணியளவில், மாதவரம் ரவுண்டானாவிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 12 வியாபாரிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தனர். அதிகாலை 2:40 மணியளவில் பாடி பகுதியில் உள்ள தாத்தங்குப்பத்திற்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக எதிரே வந்துகொண்டிருந்தார் கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன்பகுதி பயங்கரமாக சிதைந்தது. நடத்துநர் வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பஸ்சில் இருந்த பயணிகள் செங்குன்றத்தை சேர்ந்த அருள்தாஸ், ஜெகன்நாதன், வர்கீஸ், சந்திரசேகர், கிருஷ்ணம்மாள், லிங்கையா, வெங்கடேஸ்வரலு, சுரேஷ், சீனிவாசன், தேவகி, டேவிட், ஜானி ஆகிய 13 பேர் காயமடைந்தனர்.  ஓட்டுநர் கோவிந்தசாமியும், அருள்தாஸும் கவலைக்கிடமாக உள்ளனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.