ஓட்டுநர் ஒருவர் தூங்கிக்கொண்டு பேருந்தை ஓட்டியப்போது எதிர்பாராவிதமாக கார் மீது மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூக்க கலக்கத்துடன் அரசு பேருந்து ஓட்டிய டிரைவரால் 3 பேர் பலி - திருப்பூரில் திகில் சம்பவம்!!

கோவை மாவட்டத்தில் சூலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முரளிகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றும் 4 பேரான, சொர்ணமூர்த்தி, சுதர்சன், நட்ராஜ் மற்றும் தேவதாஸ் ஆகியோருடன் காரில் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்றிரவு 11 மணியளவில், திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வேலப்ப நாயகன் வலசு பிரிவில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியுள்ளார். எதிர்பாராவிதமாக எதிரே வந்து கொண்டிருந்த முரளி கண்ணனின் கார் மீது, அரசு பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது.
சம்பவ இடத்திலேயே, நட்ராஜ் சுதர்சன், சொர்னமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை அறிந்த வேலப்ப நாயகன் பகுதி காவல்துறையினர் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியதே காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.