இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 மாணவர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் ட்ரிபிள்ஸ் சென்ற இளைஞன்..! பைக்கில் சென்றவர்களுக்கு நொடியில் நேர்ந்த பயங்கரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓரகடம் பகுதியில் அப்பல்லோ பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு புத்தாண்டு பொங்கலை மாணவர் மாணவிகள் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பாரம்பரிய கலாச்சாரமான வேட்டி சேலை அணிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா (மெக்கானிக்கல்) தன்னுடன் பயிலும் ஏனலோசனி மற்றும் அசிதா (கணினி அறிவியல்) ஆகியோரை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது துருதிஷ்டவசமாக காஞ்சிபுரம்-தாம்பரம் வழியாக செல்லும் குளிர்சாதன அரசுபேருந்தானது இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியிலேயே சம்பவ இடத்திலேயே ரஹ்மத்துல்லா மற்றும் ஏனலோசனி உயிரிழந்தனர். அசிதா மீட்டெடுக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.