பெண் டாக்டர் வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் குறித்து பகீர் தகவல்! மேலும் 9 பெண்களை கொன்று எரித்ததாக திடுக் வாக்குமூலம்!

தெலங்கானா கால்நடை மருத்துவர் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 2 குற்றவாளிகள் மேலும் 9 பெண்களை கற்பழித்து இழைத்ததாக இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அடுத்த வாரத்திலேயே 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியது. என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு உயர்மட்ட காவல்துறையினர் குழு இவர்களின் பின்னணி குற்ற சம்பவங்களை விசாரித்து வந்தது.

அப்போது குற்றவாளிகளில் இருவர், இதுவரை தாங்கள் 9 பெண்களை கற்பழித்து கொன்றதாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள், தனியாக வலம் வந்த பெண்கள் மற்றும் திருநங்கைகளாவர் என்று வாக்குமூலம் அளித்தனர். தெலங்கானா-கர்நாடகா மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு துறை மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் இவர்களின் என்கவுண்டர் வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.