தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .


சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற விகிதத்தில் டிராவில் முடிந்தது . இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது .

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆன ஜஸ்பிரிட் பும்ராவுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா ,புஜாரா , ரஹானே(துணை கேப்டன்) , விகாரி , ரிஷப் பண்ட் ,சாஹா ,அஸ்வின் ,ஜடேஜா , குல்தீப் யாதவ் ,ஷமி , உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா,சுப்மன் கில் .