லேசாக ஒரே ஒரு தட்டு..! சைடு லாக் உடைந்தது..! ஒன்றரை லட்சம் ரூபாய் புல்லட் அம்போ! பரபர சிசிடிவி காட்சி!

சென்னை அடுத்து அமைந்துள்ள ஆவடியில் வசித்து வரும் பொறியாளர் ஒருவரின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


சென்னையை அடுத்து அமைந்துள்ள ஆவடியில் மூர்த்தி நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற மென்பொருள் பொறியாளர் அவரது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார். வெளியில் சென்றவர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட பைக்கை காணவில்லை. 

இதனால் அவர் அருகிலிருந்த எல்லா இடங்களிலும் தன்னுடைய வைத்திருக்கிறார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் உடனே அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்து இருக்கிறார். அப்போது அவருக்கு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அதாவது மர்ம நபர் ஒருவர் பிரகாஷின் புல்லட் பைக் யாருக்கும் தெரியாமல் சைட் லாக்கை உடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

தற்போது அந்த காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.