விரட்டி வந்த சிங்கம்! தப்பி ஓடி முதலையிடம் சிக்கிய காட்டெருமை! பிறகு நேர்ந்த அதிசயம்! வைரல் வீடியோ!

தென் ஆப்பிரிக்காவில் சிங்கங்களிடம் இருந்து தப்பிய காட்டெருமை முதலையிடம் இருந்தும் பின்னர் சிங்கங்களிடம் இருந்து போராடி மீண்ட வீடியோ வெளியாகியுள்ளது.


தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய விலங்கியல் பூங்காவில் சிங்கங்கள், காட்டெருமைகள், முதலைகள் உள்ளிட்டவை அவற்றுக்கான இயற்கைச் சூழலிலேயே பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தப் பூங்காவுக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தனது செல்ஃபோனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட காட்சிகள் மயிர்க்கூச்செரியச் செய்கின்றன. 

இந்த வீடியோவில் முதலில் பல சிங்கங்கள் பாய்ந்து ஓடி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்படியே கேமரா வேறு புறம் திரும்ப அங்கு ஒரு நீர் நிலையில் தண்ணீர் அருந்திய காட்டெருமை அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது. இந்நிலையில் சிங்கங்கள் அந்த காட்டெருமையைக் கொன்று தின்னுவதற்காக துரத்த பதறியடித்து மிரண்டு ஓடிய காட்டெருமை உயிர் பயத்தில் நேராக தண்ணீருக்குள்ளேயே பாய்ந்து விடுகிறது.

தண்ணீருக்குள் சென்ற பிறகுதான் சிங்கத்தை விட பெரிய ஆபத்து அங்கு இருந்தது காட்டெரு,மைக்குத் தெரிய வந்தது. அங்கிருந்த மிகப் பெரிய முதலை ஒன்று காட்டெருமையை துரத்தித் துரத்தித் தாக்க காட்டெருமை தப்புவதற்காக வேகமாக நீந்துகிறது. தண்ணீருக்குள் முதலை, கரையில் சிங்கங்கள். என்னதான் செய்யும் காட்டெருமை 

நீந்தி நீந்தித் தப்பிய காட்டெருமைக்கு சிங்கத்தை விட முதலைதான் பெரிய ஆபத்தாகத் தோன்றியது போலும் தட்டுத் தடுமாறி நீந்திக் கரையேறியது. ஆனால் கரையில் காத்திருந்த சிங்கத்தை விட பெரிய ஆபத்தை தண்ணீருக்குள் சந்தித்துவிட்டதால் காட்டெருமைக்கு இம்முறை சிங்கக் கூட்டம் பெரிய அபாயமாகத் தோன்றவில்லை.

சிங்கங்களை எதிர்த்து போராடிய காட்டெருமை அவற்றை முட்டப் பாய்ந்தது. என்ன ஆச்சரியம் சிங்கங்கள் பயந்து ஓடின. சிங்கங்களுடன் காட்டெருமைக் சுற்றிச் சுற்றி வந்து போராடிக் கொண்டிருந்த நிலையில் அதன் நண்பர்களான காட்டெருமை கூட்டம் அங்கு வர ராட்சத பலம் வந்தது போல உணர்ந்த காட்டெருமை சிங்கங்களை ஒட ஓடத் துரத்தியடித்தது.