பட்ஜெட் 2019-2020! எந்த பொருளின் விலை குறையும்? எந்த பொருளின் விலை அதிகரிக்கும்?

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை தொடர்ந்து சில பொருட்களின் விலை அதிகரிக்கும் மற்றும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி அமலில் இருந்தாலும் கூட தற்போது வரை சுங்க வரி, செஸ் வரி, கலால் வரி ஆகியவை பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தங்கத்திற்கான இறக்குமதி வரி இதுவரை 10 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த வரியை 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளார் நிர்மலா. இதனால் தங்கம் இறக்குமதிக்கு வியாபாரிகள் கூடுதல் செலவு செய்ய வேண்டும். எனவே தங்க நகைகளின் விலை நிச்சயம் உயரும்.

இதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதனை சரி செய்யும் வகையில் ஒருலிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு ரூபாயும் என கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 2.50 ரூபாய் வரை உயரும். டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.30 வரை அதிகரிக்கும். இது தவிர டைல்ல்ஸ், முந்திரி, வினைல், வாகன உதிரிபாகங்கள், சிந்தடிக் ரப்பர், டிஜிட்டல் மற்றும் வீடியோ கேமரா, சிசிடிவி கேமரா மீது அடிப்படையான சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

இவைகள் தவிர உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உற்பத்தி மூலப் பொருட்களான அமார்பஸ் அலாய் ரிப்பன், எத்தலின் டி குளோரைடு, புரபலைன் ஆக்ஸைடு, கோபால்ட் மேட், நாப்தா, வூல் பைபர்ஸ், செயற்கை சிறுநீரகத்திற்கான உள்ளீட்டு பொருள், ஒரு மறை பயன்படுத்தக்கூடிய ஸ்டெரிலைஸ்டு டயாலைசர், அணு மின் நிலையங்களுக்கான எரிபொருள் போன்றவற்றுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

1)      பெட்ரோல்

2)      டீசல்

3)      தங்கம்

4)      இறக்குமதியாகும் புத்தகம்

5)      முந்திரி பருப்பு

6)      பிவிசி

7)      வினைல்

8)      டைல்ஸ்

9)      உலோக இணைப்புகள் (மெட்டல் பிட்டிங்ஸ்)

10)  மார்பிள்

11)  ஆப்டிகள் பைபர் கேபிள்

12)  சிசிடிவி கேமரா

13)  ஐபி கேமரா

14)  டிஜிட்டல் கேமரா

15)  சிரெட்

விலை குறையும் பொருட்கள்

1)      மின்சாதனப் பொருட்கள்

2)      மின்சார வாகனங்கள்