பழைய காதலனாக இருந்தாலும் இப்போ ஓகே..! வாய்ப்புகளுக்காக கொழுக் மொழுக் நடிகை எடுத்த முடிவு!

படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் முன்னணி நடிகை மீண்டும் தன்னுடைய பழைய காதலை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகிலும், டோலிவுட் திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அந்த கொழுக் மொழுக் நடிகை. அவருடைய உடல் தோற்றத்தினால் ரசிகர் பட்டாளம் அதிகளவில் உயர்ந்தது‌. ஆனால் சமீப காலங்களில் அவருடைய உடல் எடை மிகவும் மெலிந்துள்ளது.

இதனால் அவருடைய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு கொழுக்மொழுக் என்று இருந்தால் மட்டுமே பிடிக்கும் என்பதை அந்த நடிகை மறந்துவிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய ஒரு நடிகருடன் காதலிலும் ஈடுபட்டுவந்தார். அந்த காதலும் இடையிலேயே முறிந்து போனது.

தொடர்ந்த தோல்விகளை சந்தித்து வந்த அந்த நடிகை திரையுலகில் மார்க்கெட்டை இழந்தார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரால் மீண்டும் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க முடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் அந்த சர்ச்சை நடிகருடன் தன்னுடைய காதலை தொடர்ந்தால், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பெயர் அடிபட்டு கொண்டிருக்கும் என்றும் அதன்மூலம் இழந்த மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்றும் அந்த நடிகை புது கணக்கு போட்டார்.

அதற்கு முதல் படியாக அந்த சர்ச்சைக்குரிய காதலனை தன்னுடைய படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வைத்தார். புரிந்துகொண்ட அந்த சர்ச்சை காதலர், முன்பு செய்த அதே தவறை செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று நல்லவராக மாறிவிட்டார். இதனை பார்த்த அந்த கொழுக் மொழுக் நடிகைக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது எப்படி மார்க்கெட்டுக்குள் மீண்டும் நுழைவது என்ற தீவிர யோசனையில் அந்த கொழுக் மொழுக் நடிகை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.