பள்ளிக் கூட வகுப்பறையில் இளம் ஆசிரியை கழுத்தை அறுத்து கொடூர கொலை! அதிர வைத்த ஒருதலை காதலன்!

கடலூர் மாவட்ம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள காயத்திரி மெட்ரிகுலேசன் எனும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  இவரை அவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ராஜேசேகர் என்ற நபர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் காதலை ரம்யா ஏற்கவில்லை. ராஜகசேகரையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ராஜசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரம்யா வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளான்.  ஆனால் ராஜசேகர் நடத்தை சரியில்லை என்று அவனுக்கு ரம்யாவை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர் பெற்றோர்.

மேலும் ரம்யாவும் ராஜசேகரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரும் ராஜசேகரின் கல்யாண பேச்சை கண்டித்து அனுப்பியுள்ளனர். இதனால் ரம்யா மீது ராஜசேகருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ரம்யா வேலை செய்யும் காயத்ரி மெட்ரிகுலேசன் பள்ளிக்குச் சென்ற ராஜசேகர் வகுப்பறையில் இருந்த ரம்யாவுடன் தகராறு செய்துளளான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவன் வலியுறுத்தியுள்ளான்.

ஆனால் ரம்யா அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தான் கையோடு கொண்டுவந்திருந்த கத்தியால் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை ரம்யா கழுத்தை அறுத்துள்ளான். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதனை பார்த்த மாணவர்களும் சக ஆசிரியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். தப்பி ஓடிய ராஜகசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.