அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்திய திரைப்படங்கள்! ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் !

ரக்ஷா பந்தன் விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது . பொதுவாக ரக்ஷாபந்தன் விழாவானது சகோதர சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது .


தமிழ் சினிமாவில் சகோதர சகோதரிகளின் அன்பை மையமாகக் கொண்டு  பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன . அவ்வகையான திரைப்படங்களை இனி நாம் காண்போம் .

1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாவித்திரி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துிருந்தனர் .அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது தமிழ் திரையுலக வரலாற்றில் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் படங்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .

1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் அண்ணன் தங்கையாக  இருப்பார்கள் . விஜயகுமார் ராதிகா இவர்களின் தத்ரூபமான நடிப்பின் மூலம் அண்ணன் தங்கைகளுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பை தமிழ் சினிமா  ரசிகர்களுக்கு வெளிக் காட்டி இருப்பார் .

2002 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமார் முரளி மனோஜ் பாரதிராஜா மற்றும் காவிரி நடித்துிருப்பார்கள் .இந்த திரைப்படத்தில் சரத்குமார் முரளி மனோஜ் பாரதிராஜா ஆகியோர்கள் நடிகை காவேரிக்கு அண்ணன்களாக நடித்துிருப்பார்கள். இந்தத் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .

2003ம் ஆண்டு இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சொக்கத்தங்கம் திரைப்படத்தில் சௌந்தர்யா நடிகர் விஜயகாந்த் சௌந்தர்யா கவுண்டமணி செந்தில் மற்றும் உமா  போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துிருந்தனர் . இந்த திரைப்படத்தில் நடிகை உமாவிற்கு அண்ணனாக நடிகர் விஜயகாந்த் நடிப்பில் அசத்தி இருப்பார் . இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

2005ம் ஆண்டு இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் , திரிஷா மற்றும் மல்லிகா ஆகியோர்கள் நடித்து இருந்தார்கள்.  இந்த திரைப்படத்தில் நடிகை மல்லிகாவிற்கு அண்ணனாக நடிகர் விஜய்  நடித்து இருப்பார் . தங்கை மல்லிகா விற்காக அண்ணன் விஜய் செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் நிறைந்த இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களின்  பெரியவ வரவேற்பை பெற்றது .