அண்ணன் மனைவியின் அந்த உறுப்பை அறுத்து வீசிய கொழுந்தன்! அதிகாலையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

இளைஞர் ஒருவர் மதுபோதையில் தன்னுடைய அண்ணியின் மூக்கை வெட்டியுள்ள சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் மூக்கு அறுக்கப்பட்டு நேற்று காலையில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, "என் கணவரின் தம்பி என்னுடைய மூக்கை அறுத்துவிட்டார். காலையில் அதிக அளவு மது அருந்தி இருந்தார். எதனால் என் மூக்கை அறுத்தார் என்பது தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் கூறுகையில், "காலை 6:30 மணி அளவில் பெண் ஒருவருக்கு மூக்கு அறுக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. பால் சம்பந்தமாக ஏதோ தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் எங்களுடைய காவலில் தான் உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு பிற தகவல்களை தெரிவிப்போம்" என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.