பிரிட்டன் இளவரசர் கொரோணாவில் இருந்து மீளக் காரணம் இந்திய ஆயுர்வேத சிகிச்சை? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்! உண்மை பின்னணி!

பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ், கொரொனா தொற்றில் இருந்து ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணம் அடைந்ததாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லசும் இறை ஆகினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று நோயிலிருந்து குணப்படுத்த பட்டதாக வீடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில் இளவரசர் சார்லஸ் குணம் அடைந்தது குறித்து மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் தான் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் பெங்களூருவை சேர்ந்த ஐசக் மத்தாய் என்பவர்தான் இந்த தகவலை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐசக் மத்தாய், சௌக்கியா ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை நடத்தி வருகிறார். ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி ஆகிய இரண்டையும் கலந்து அளித்த சிகிச்சையால் தான் இளவரசர் சார்லஸ் குணம் அடைந்ததாகவும் மத்திய இணை அமைச்சர் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அனைவரின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த தகவலை குறித்து ஐசக் மத்தாய் அவர்களிடம் கேட்ட பொழுது, பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் என்னுடைய வாடிக்கையாளர்கள் தான். ஆனால் அவர்களுக்கு நான் எந்த சிகிச்சை அளித்தேன் என்று என்னால் மருத்துவ முறைப்படி கூற முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். 

ஆனால் ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு நான் இந்த மருந்தை பயன்படுத்தி இருக்கிறேன் என்றும் ஐசக் மத்தாய் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை யாருக்குமே நான் கொரோனா சிகிச்சை அளிக்கவில்லை எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இளவரசர் சார்லஸ் அவர்களின் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவருக்கு நேஷனல் ஹெல்த் சர்வீஸ் தான் சிகிச்சை அளித்தது என்றும் கூறியுள்ளனர். கிடைத்த எல்லா தகவல்களும் முரண்பாடாக உள்ள நிலையில் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இளவரசர் சார்லஸ் க்கு எந்த விதமான சிகிச்சைகள் வழங்கப்பட்டது எனவும் பலரும் சந்தேகம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.