ஒரு நாளைக்கு 50 முறை டூ பாத்ரூம்..! உடல் எடையில் 26கிலோவை இழந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

இளம்வயது தாயார் ஒருவர் ஒரு நாளைக்கு 50 முறை கழிவறைக்கு சென்றுவரும் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் என்று பகுதி அமைந்துள்ளது. இங்கு 37 வயதான ட்ருடி ஸ்டோனார்ட் என்றதால் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் மரணத்தின் விளிம்பிற்கு சென்று அதிர்ஷ்டவசமாக ஒரு வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கடந்த 10 வாரங்களிலேயே இவர் 26 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 50 முறை கழிவறைக்கு சென்று வருவதாகவும் தெரிய வருகிறது. அவருடைய குடல் பகுதியில் அரிய வகையான அழற்சி ஏற்பட்ட காரணத்தினாலேயே அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதாவது 2014 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இவருக்கு இந்த நோய் முதன் முதலில் ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண சிப்ஸ் பாக்கெட்டை சாப்பிட்டால் இவருடைய வயிறு மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எவ்வளவு பெரிய மருத்துவர்களை கலந்து ஆலோசித்து போதிலும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் ஒரு நாள் கேஎஃப்சி உணவகத்தில் ஒரு பொருளை வாங்கி சாப்பிட்ட போது ரத்தம் கலந்த மலம் வெளியேறியுள்ளது. அப்போதுதான் தனக்கு மிகவும் சிக்கலான பிரச்சனை இருக்கக்கூடும் என்று ட்ருடி கணித்துள்ளார். 10 வாரங்களில் 56 கிலோ எடையுடன் இருந்த இவர் 32 கிலோவிற்கு எடை குறைந்தார். 

இது அவருடைய உடல்நிலை மோசமாக பாதித்தது. பின்னர் 2015-ஆம் ஆண்டில் மருத்துவர்கள் அவருடைய குடற்பகுதியில் சோதித்து பார்த்ததில் அழற்சி காரணமாக குடல் முழுவதும் புண்ணால் வெந்து கிடப்பதாக கூறியுள்ளனர். பெருங்குடல் முழுவதையும் அகற்றி ஒரு பையுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் ட்ருடியிடம் கூறியுள்ளனர்.

அவர் சம்மதம் தெரிவித்த பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தன்னுடைய நீண்ட நாள் வலியிலிருந்து விலகி இருப்பதாக ட்ரூடி மனம் நெகிழ்ந்துள்ளார்.

இந்த செய்தியானது பிரிட்டன் நாட்டின் ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.