பிரிட்டனில் 4 வருடத்திற்கு முன்னர் சகோதரரின் இறுதிச்சடங்கின்போது அறிமுகமான நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த வெட்டியானோடு கள்ளக் காதல்..! 3 குழந்தைகளின் தாயார் எடுத்த பகீர் முடிவு!

பிரிட்டனில் போதைப் பொருட்களுக்கு அடிமையான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்குகளை 41 வயது நிரம்பிய சகோதரி அன்கோர்வர் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யும் நபரான லீ அப்போது அன்கோர்வர் அறிமுகம் ஆனார்.
அறிமுகம் நாளடைவில் நட்பாக மாறியது. சகோதரரை இழந்து வாடிய அன்கோர்வருக்கு லீ பல உதவிகள் செய்துவந்துள்ளார். அவரின் உதவிக் குணத்தை பார்த்து அவரை காதலிக்க தொடங்கினார் அன்கோர்வர். ஏற்கனவே இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் இவர்களுக்கிடையே ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து அன் கூறுகையில், லீ மிகவும் மென்மையானவர், என் சகோதரரை இழந்து நான் நிற்கும் போது எனக்கு மிக பெரியளவில் ஆதரவாக இருந்து உதவிகளை அவர் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.