பிரமாண்ட பாலம்! கண் இமைத்த நொடி! அப்படியே உள்வாங்கிய அதிர்ச்சி காட்சி! காரோடு உள்ளே சென்ற மனிதர்கள்!

திடீரென்று பாலம் உள்வாங்கிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


துருக்கி நாட்டில் டெர்மே எனும் நகர் அமைந்துள்ளது. இது கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள நீர்நிலைகளின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நேற்று டெர்மே நகரில் உள்ள பாலம் திடீரென்று உள்வாங்கியது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்களும், பொதுமக்களும் கடலுக்குள் விழுந்தனர். இது சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாலம் உள்வாங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் தப்பித்தவர்களின் முக பாவனைகள்  சிசிடிவி காட்சிகளில் பார்க்கும் போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய இருவரும் உயிரிழந்த சம்பவமானது துருக்கியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.