திடீரென உள்வாங்கி இடிந்த பாலம்! தொங்கிய கார்கள்! திக் திக் நிமிடங்கள்!

பாலமானது திடீரென்று இடிந்து விழுந்ததில் கார்கள் சிக்கிக்கொண்ட சம்பவமானது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


குஜராத் மாநிலத்தில் ஜூனாகாத் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட மலாங்கா எனப்படும் கிராமத்தில் பாலம் ஒன்று உள்ளது. கடந்த சில வாரங்களாக குஜராத் மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. மழையின்  தாக்குதலினால் இந்த பாலமானது நேற்று மதியம் திடீரென்று நடுப்பகுதியில் இடிந்து விழுந்தது. 

பாலத்தின் மையப்பகுதியானது இடிந்து விழுந்த ஆற்றுக்குள் சென்றது. அப்போது அந்த பாலத்தில் 4 கார்கள் இடர்பாடு சிக்கிக்கொண்டன. கார்களுக்குள் இருந்த மக்கள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், கார்களுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் ஜூனாகத் பகுதியிலிருந்து முந்த்ராவிற்கு செல்வதற்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.