மணக்கோலத்தில் திளைத்த உறவினர்கள்! தாலி கட்ட அரை மணி நேரம் தான்! ரூமில் சடலமாக தொங்கிய மணமகன்! அதிர வைக்கும் காரணம்!

திருமணத்திற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மாநகர் அமைந்துள்ளது. ஹைதராபாதின் புறநகரான கொம்பல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். மென்பொறியாளர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. மண்டபத்தின் மணமகன் அறையில் சந்தீப் இருந்தார். உறவினர்கள் அவரை வெளியே அழைத்தபோது முகஒப்பனை செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே நெடுநேரமாகியும் சந்தீப் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பயந்து போன உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது சந்தீப் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து சந்தீப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கொம்பல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.