விறுவிறுப்பாக நடைபெற்ற திருமண ஏற்பாடு..! 7 நாட்களில் மண விழா..! ஆனால் தாய் - தந்தையுடன் சேர்ந்து விஷம் குடித்த புது மாப்பிள்ளை! அதிர்ச்சி காரணம்!

திருமணத்திற்கு 1 வாரகாலம் எஞ்சியிருந்த நிலையில் மணமகன் பெற்றோருடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசிக்கு அருகில் கடையம் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சந்தானம்-லட்சுமி தம்பதியினர் தங்களுடைய மகனுடன் வசித்து வந்தனர். இவர்களுடைய மகனின் பெயர் ஸ்ரீதர். ஸ்ரீதருக்கு ஜோதி என்ற தங்கையும் உண்டு. சந்தானம் அப்பகுதியில் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.

இதனிடையே புதிதாக ஒரு வீடு கட்டி குடும்பத்தினர் அனைவரும் குடிபெயர்ந்தனர். இதனிடையே இவருடைய குடும்பத்தினர் கடன் சுமையால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். புது வீடு கட்டுவதற்கும் சந்தானம் குடும்பத்தினர் நிறைய கடன் வாங்கியுள்ளனர். 

15-ஆம் தேதி அன்று கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு இவர்களிடம் முறையிட்டனர். இதனால் ஸ்ரீதர் மற்றும் அவருடைய பெற்றோர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டனர். 

திடீரென்று நேற்றிரவு 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜோதி தூங்கி கொண்டிருந்ததால் அவருக்கு நிகழ்ந்தது தெரியவில்லை. விடியற்காலையில் 3 பேரும் சடலமாக கிடந்ததை கண்ட ஜோதி அலறி அடித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜோதி 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மூவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடன் சுமை மட்டுமா தற்கொலைக்கு காரணம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.