திருமணத்தை திடீரென நிறுத்திய புரட்சிப் பெண் - காரணம் கேட்டா பாராட்டுவீங்க

திருமண நிச்சய மேடையிலிருந்த பெண் ஒருவர் மத ரோகம் கூறிய வார்த்தையை கேட்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்தி உள்ள சம்பவமாகவே பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேச நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் தங்கியிருந்தார். இவருக்கு பெங்களூருவில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. 

திருமண பெண்ணின் தாயாருக்கு  2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாற்று சிறுநீரகத்திற்கு முயன்று பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

தாயாருக்காக சிறுநீரகத்தை தானம் செய்ய அவருடைய மகள் முன்வந்துள்ளார். தன்னுடைய வருங்கால கணவரிடம் இதுபற்றி அவர் கலந்தாலோசித்தார். அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதை கேட்ட பெண் இந்த திருமணம் நடைபெற வேண்டியதில்லை என்று முடிவெடுத்தார். 

21-ஆம் தேதியன்று தன் சிறுநீரகத்தை தன் தாய்க்கு அளித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், "வழக்கமாக திருமணமாகாத பெண்களிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று கொள்ள மாட்டோம். ஆனால் தன் தாயின் உயிரை காப்பாற்றுவதில் அவருடைய மகள் உறுதியாக இருந்ததால் இந்த அறுவை சிகிச்சையை நாங்கள் செய்தோம்" என்று கூறினார். 

மணமகளின் உயர்ந்த நோக்கில் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.