சீரியல் பாக்குறப்போ பச்சத் தண்ணி கிடையாது! கணவனுக்கு கண்டிசன் போட்டு மனைவி வச்ச விவகாரமான பேனர்!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தபாடிபுதுாரில் ஒரு புதுவிதமான விதிமுறைகளுடன் கூடிய திருமணம் ஒன்று நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிபுதுாரில் வசித்து வரும் ஸ்ரீதர் - லாவண்யா தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுடைய திருமணம் பற்றி பேசுவதற்கு முக்கிய காரணமே திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் தான். வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வைக்கப்பட்ட பேனரில் மணப்பெண்ணின் 11 கண்டிஷன்கள் போடப்பட்டிருந்தது. அந்த 11 கண்டிஷன்களையும் மணமகன் ஸ்ரீதர் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார். பேனரில் பட்டியலிட்ட வியக்க வைக்கும் 11 கண்டிஷன்கள் என்னவென்று இப்போது காணலாம்.

1. உன்னுடைய மனைவி நானாகிறேன்.மற்றொரு காதலி உனக்கு இருக்கக்கூடாது.

2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது,அவளுடைய அழகை வர்ணிக்க கூடாது.

3.இரவு 8.30 மணிக்கு கிச்சன் குளோஸ்.4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ்.

5.தேங்காய்எண்ணெய்,சோப்பு,ஷாம்பு,துண்டு ஆகியவற்றை சொந்தமாக எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்,அதற்காக தொந்தரவு செய்ய கூடாது.

6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி,பழைய சாப்பாடாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்

7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.

8. சாயங்காலம் 6.30 முதல் 9.30வரை சீரியல் டைம்.கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.

9. உறக்கத்தில் குறட்டை விடவோ சத்தம் போடவோ கூடாது.

10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.

11. மிக முக்கிய குறிப்பாக என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களிடம் இருந்து தர்ம அடி விழும்.

மேலே கூறப்பட்ட பதினோரு கண்டிஷன்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தது இந்த 11 கண்டங்களுக்கும் மணமகன் ஸ்ரீதர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் அவரது ஆதார் கார்டும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த பேனர் வைரலாக பரவி வருகிறது இதனை பார்த்த நெட்டிசன்கள் , மணப் பெண்ணின் சாமர்த்தியத்தை கண்டு பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.