வருங்கால கணவனுக்கு இளம் பெண்ணால் ஏற்பட்ட பகீர் சம்பவம்..! அதிர்ச்சி காரணம்!

சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பாகிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் பெஷாவர் நகரில் அமைந்துள்ள ஒரு குட்டையிலிருந்து சென்ற வாரம் இளைஞர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். உடனடியாக பெஷாவர் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் பர்விந்தர் சிங் என்ற 25 வயது சீக்கிய இளைஞர் என்பது தெரியவந்தது. வேத பரிசோதனை அறிக்கையில் தலை மற்றும் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இவருடைய வருங்கால மனைவியான பிரேம்குமாரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்த பிரேம்குமாரியிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு ஈடுகொடுக்க முடியாத பிரேம்குமாரக உண்மையை கூற தொடங்கினார். 

பிரேம்குமாரி திருமணம் நிச்சயக்கப்பட்ட தற்கு முன்பாக தன்னுடைய தோழியின் சகோதரரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே தங்களுடைய காதலுக்கு இடையூராக இந்த திருமணம் அமைந்ததால் பிரேம்குமாரி கூலிப்படையை ஏவி பர்விந்தர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக பிரேம்குமாரி கூலிப்படைக்கு 7 லட்சம் ரூபாய் விலை பேசினார்.

திட்டமிட்டவாறு பிரேம்குமாரி பர்விந்தர் சிங்கை மர்தான் என்ற பகுதிக்கு அழைத்து சென்று கூலிப்படையினரால் கொலை செய்ய வைத்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரேம்குமாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது பெஷாவர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.