திருமணம் செய்து வைத்த ஐயருடன் ஓடிய மணப்பெண்! தவிக்கும் மணமகன்!

மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா என்ற இடதை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தனக்கு திருமணம் செய்து வைத்த ஐயர் உடன் இணைந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மணப்பெண் ரீனா பாய், வயது 21 - இவருக்கு,  இந்த(மே) மாதம் 7- ஆம் தேதி அன்று வீட்டு பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம்  திருமணம் செய்து வைக்கப்பட்டது.  இவர்களது திருமணத்தை வினோத் மஹாராஜா என்ற ஐயர் ஒருவர் நடத்தி வைத்தார். 

ரீனா பாய் கடந்த மே 23 முதல் வீட்டில் காணவில்லை.  இவரை இவரது கணவர் மற்றும் பல உறவினர்கள் என பலரும் வலை வீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றையும் காணவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.  இது இவரின் உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பின்னர் விசாரித்த போது தனக்கு திருமணம் செய்து வைத்த ஐயர்  வினோத் மஹாராஜாவிற்கும், மணப்பெண் ரீனா பாய் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாகவே ரகசிய உறவு நீடித்து வந்துள்ளது தெரியவந்தது.  

இதன் காரணமாகவே தனக்கு திருமணம் செய்து வைத்த ஐயர் என்றும் பாராமல் அவருடனே ஓடிவிட்டார்.