உலக கோப்பையில் அந்த அணியை இந்தியாவால் வீழ்த்த முடியாது! மெக்கல்லம் போடும் குண்டு!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரென்டன் மெக்கல்லம் இந்த உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் எவ்வளவு வெற்றிகள் பெறும் என்பதனை கணித்துள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வீரருமான பிரெண்டன் மக்கலம் நடப்பு உலக கோப்பையில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தகுதி சுற்று முடிவில் முதல் இரு இடங்களை  பிடிக்கும் என்று கணித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதி ஆட்டம் வரை செல்ல காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தன்னுடைய அதிரடியான ஆட்டத்தினாளும் பணிவான பண்பினாலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தன்னை விரும்பும்படி செய்தவராவார். குறிப்பாக இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் 158 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரை பெரிதும் விளம்பரப்படுத்தினார்.

தற்போது வர்ணனையாளராக மாறியுள்ள இவர் உலக கோப்பையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை தன்னுடைய அனுபவத்தினால் கணித்துள்ளார். அவரின் கணிப்புபடி, இந்திய அணியும் இங்கிலாந்து தணியும் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரு அணிகளாக தேர்ச்சி பெறும் என்று கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து இடமும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியுறும் என்று கணித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 6 ஆட்டங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். அந்த அணியானது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போன்றவர்களிடம் தோல்வியுறும் என்று கணித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நான்காவது இடத்திற்காக கடும் போட்டி நிலவக் கூடுமென்றும், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீஸ் முதலிய அணிகள் ஐந்து வெற்றிகளை குவிக்கும் என்றும் ஆருடம் கூறியுள்ளார். நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி சிறிது அதிர்ஷ்டத்துடன் தேர்ச்சி பெற வேண்டும் என்ற பிரார்த்திப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார். 

இவருடைய ஆருடத்தினை பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் வரவேற்றும் சில பல மாற்றங்களை செய்தும் திருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.