36 வயது பெண் பிரதமர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்..! அவரே வெளியிட்டார்! நெகிழ்ச்சி செயல்!

உலகின் மிகவும் இளம் வயது பிரதமர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பின்லாந்து நாட்டின் பிரதமரின் பெயர் சன்னா மரின். இவருடைய வயது 34. இவர் தான் உலகிலேயே மிகவும் இளம் வயது பிரதமராவார். 2015-ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மேலும் அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சமூக ஜனநாயகக் கட்சியின் துணை தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இவருக்கு சமூகவலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உண்டு. ஆதலால் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற செயலிகளில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய கர்ப்பகாலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தாய்ப்பால் ஊட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்.  

இந்த புகைப்படங்கள் உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் அவர் தான் அரசியலுக்கு வருவதற்கு முழுமுதற் காரணம் தன்னுடைய தாயார் என்று புகழ்ந்துரைத்துள்ளார். எந்த சூழ்நிலையையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தன் தாயார் தனக்கு கற்றுக்கொடுத்ததாக அவர் பெருமைப்பட கூறியுள்ளார். 

மேலும் ஓரினச்சேர்க்கையாளர் தம்பதியினருக்கு, தான் பிறந்தவர் என்றும் எதையும் வெளிப்படையாக பேசுவதற்கு சிரமப்பட்டு வளர்ந்ததாகவும் தன்னுடைய நேர்காணலில் 2015-ஆம் ஆண்டில் தெரிவித்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.