இந்தியாவுக்கு வந்தது விடிவு காலம்..! அடுத்த வாரம் முதல் கொரோனா குறையும்..! எப்படி தெரியுமா?

அடுத்த வார தொடக்கத்திலிருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறையும் என்று பிரபல பல்கலைக்கழகம் கூறியிருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,05,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 17,70,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 7,529  பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 653 பேர் குணமடைந்து இருப்பதாகவும்,  242 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் ஆக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அமெரிக்க நாட்டிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஓரிரு வாரங்களில் கணிசமாக குறைந்துவிடும் என்று இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. அதாவது இந்திய நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முழுவீச்சில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த பலனை இந்திய நாடு எதிர்பார்க்கலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இன்னும் ஒரு மாத அளவிற்கு தனிநபர் இடைவேளை ஊரடங்கு ஆகியவற்றை நீடித்த ஆகவேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது. இந்த அறிக்கையானது நம் நாட்டு மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.