30 அடி ஆழ கிணறு..! அடிவயிற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கி இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..! கேட்போரை உருக வைக்கும் சம்பவம்!

கர்நாடகாவில் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்காக போராடிய நாயை தன் இடுப்பில் கயிறு கட்டி என் ஒருவர் கிணற்றிலிருந்து மீட்டெடுத்த சம்பவம் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


கர்நாடக மாநிலம் மங்களூருவில் நாய் ஒன்று 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. நீரில் விழுந்த அந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்து இருந்த பெண் ஒருவர் தைரியமாக கிணற்றுக்குள் இறங்கி நாயை போராடி மீட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்தப் பெண் நாயை மீட்டு எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவானது ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது .ஸஅந்த வீடியோ பதிவில் நாய் ஒன்று கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது . அப்போது அங்கு இருந்த இளம்பெண் ஒருவர் தன் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் மெதுவாக இறங்குகிறார்.

இறங்கிய அவர் மேல் இருந்து கொடுக்கப்படும் கயிறு ஒன்றை வாங்கிக் கொண்டு அதில் நாயின் கழுத்தை கட்டி மேலே அனுப்புகிறார். கிணற்றை சுற்றி நிற்பவர்கள் கயிறை பொறுமையாக இழுத்து நாயை மேலே தூக்கி காப்பாற்றுகின்றனர். மேலே வந்த நாய் செய்வதறியாது தலைதெறிக்க ஓடி விட்டது. பின்னர் அந்த பெண் நாயை பத்திரமாக மீட்ட சந்தோஷத்தில் பொறுமையாக கிணற்றிலிருந்து மேலே ஏறி வருகிறார்.

மனிதாபிமானம் குறைந்து போன இந்த காலகட்டத்தில் ஒரு ஜீவராசியை காக்க தன் உயிரையே பணையம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி அதனுடைய உயிரை பத்திரமாக மீட்டு எடுத்த அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர் . மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ட்விட்டர் பயனர்கள் பலரும் பகிர்ந்தும் கமெண்ட்டுகளை பதிவு செய்தும் வந்துள்ளனர்