திடீரென ரிவர்ஸில் பாய்ந்த அரசுப் பேருந்து! பதறிய டிரைவர்! சிதறி ஓடிய மக்கள்! ராஜபாளையம் பரபரப்பு!

பின்நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதிய சம்பவமானது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. மலையடிப்பட்டி ரயில்வே கேட் பகுதியின் ஏற்றத்தில் பேருந்து ஏறி கொண்டிருந்தபோது சரிவர பிரேக் பிடிக்கவில்லை. பிரேக் பிடிக்காததால் பேருந்து வேகமாக பின்நோக்கி நகர்ந்தது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது.

மோதி அதிர்ச்சியை சைக்கிள்களும், கார்களும் பெரும் சேதமடைந்தன. பேருந்து பின் நோக்கி வேகமாக வருவதை பொதுமக்கள் கண்டதால் அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.