நம்பி படுக்கையை பகிர்ந்த காதலி! பிறகு கை விரித்த காதலனால் இளம் பெண் எடுத்த அதிரடி தடாலடி!

திருமணம் செய்வதாக ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்த காதலனின் வீட்டிற்கு முன்பு காதலி தர்ணா போராட்டம் செய்யும் சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டத்தில் மேச்சேரி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதிக்கு உட்பட்ட கூணான்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் ஐ.டி.ஐ கல்லூரியில் படித்தார். இதே கிராமத்தை சேர்ந்த ரமணி என்னும் பெண் ஹரிஹரனுடன் ஐ.டி.ஐ கல்லூரியில் ஒன்றாக படித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. சிறிது நாட்களில் நெருக்கம் காதலாக மாறியது. 

ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிவதற்கு இடம்பெயர்ந்தனர். அப்போது ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரமணியை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார். இருவரும் பல முறை உடலுறவு வைத்து கொண்டனர். இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஹரிஹரனை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரமணி வற்புறுத்தினார்.

ஹரிஹரனும் ஒப்புக்கொண்டு தன் ஆதார் கார்டை எடுத்து வருவதாக கூறி சொந்த ஊருக்கு சென்றார். ஆனால் 2 மாத காலமாகியும் ஹரிஹரன் மீண்டும் திருப்பூருக்கு வரவில்லை. ரமணி ஹரிஹரனை தொடர்பு கொண்டபோது, ஹரிஹரன் போனை எடுக்கவில்லை. கடைசியாக ஒரு முறை போனில் பேசிய ஹரிஹரன் ரமணியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதனைக் கண்டு நடுங்கிய ரமனி தன் சொந்த ஊருக்கு சென்று ஹரிஹரன் வீட்டின் முன் தர்ணா செய்து முறையிட்டுள்ளார். இதனால் ஹரிஹரன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். மண்ணெண்ணெய் ஊற்றி ஹரிஹரனின் புதிய வீட்டின் வாசலில் ரமணி ரகளை செய்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த மேச்சேரி காவல்துறையினர் ரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மேச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.