மாணவிகள் ஹாஸ்டல் அறையில் ஒரு நாள்..! தோழியுடன் இளைஞன் செய்த செயல்! கையும் களவுமாக சிக்கிய போது கூறிய தகவல்!

ஆந்திராவில் அமைந்துள்ள பிரபல கல்லூரியின் மாணவி விடுதியில், மாணவர் ஒருவர் ஒரு இரவு முழுவதும் தங்கியிருந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட நுஸிவிடு என்ற நகரில் பிரம்மாண்டமான ஐஐடி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மொத்தம் 6,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இருபாலினருக்கும் தனித்தனியாக விடுதி அறைகள் கட்டப்பட்டுள்ளன.

மாணவிகளின் விடுதிக்குள் உரிய காரணமின்றி செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. ஒரு நாள் முழுவதும் மாணவிகளின் விடுதியில் ஒரு அறை வித்தியாசமாகவே காணப்பட்டது. பொறுத்துப் பார்த்த சக மாணவிகள், அந்த அறையை குறித்த சந்தேகங்களை விடுதி மெய்க்காப்பாளரிடம் தெரிவித்தனர். 

உடனடியாக அவர் தன்னுடைய உதவியாளர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் அறையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த அறையில் தங்கியிருந்த மாணவியுடன், மாணவன் ஒருவன் இருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவ்விருவரிடமும் கல்லூரி நிர்வாகம் தீவிர விசாரணையில் ஈடுபட்டது. அடுத்த நடவடிக்கை குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரக்கூடும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது ஆந்திரா ஐஐடி கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.