அதிவேகத்தில் லாரி! அஜாக்கிரதையாக சைக்கிள் சிறுவன்! நொடியில் டிராஃபிக் போலீஸ் செய்த செயல்! குவியும் பாராட்டு!

அஜாக்கிரதையாக சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை காவலர் காப்பாற்றிய சம்பவமானது பண்ருட்டியில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


பண்ருட்டி காவல் நிலையத்தில் ராஜதீபன் என்பவர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.  இவர் வழக்கம் போல நேற்று பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிறுவன் ஒருவன் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளான். எதிரே வரும் லாரி அவன் காணாது சாலையை கடக்க முயன்றான். இதனைக்கண்ட ராஜதீபன், தக்க சமயத்தில் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தினார்.

இல்லையெனில் நிச்சயமாக சிறுவன் மீது லாரி மோதிருக்கும். சாலையைக் கடக்க முயலும் சிறுவர்கள் கவனத்துடன் கடக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இந்த நிகழ்வின் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போக்குவரத்துக் காவலரின் சமயோஜித தன்மைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.