வலியால் துடித்த இளம் கர்ப்பிணி! டாக்டர் இல்லை என பிரசவம் பார்த்த செவிலியரால் நேர்ந்த விபரீதம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாக தாயும், சேயும் உயிரிழந்தனர்.


இதனால் கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பவதி அகஸ்தியா வலியால்  துடிப்பதை பார்த்து பணியில் இருந்த செவிலியிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உடனே, பணியில் இருந்த பயிற்சி செவிலியர், டாக்டர்கள் விடுமுறை என கூறியுள்ளார். இதனால் அன்று இரவு முழுவதும் விடிய விடிய வலியால் துடித்துள்ளார் அகஸ்தியா.

மறுநாள் அறுகை சிகிச்சை செய்த போது குழுந்தை இறந்து பிறந்ததாக மருத்தவர்கள் கூறியுள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி அகஸ்தியாவின் கருப்பையையும் அவர்கள் அகற்றியதாகக் கூறினர். இந்நிலையில் அகஸ்தியா உயிரிழந்து விட்டதாக நள்ளிரவு ஒரு மணி அளவில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அகஸ்தியா உயிரிழப்புக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தான் காரணம் எனபுகார் எழுந்துள்ளது. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.