நேர்கொண்ட பார்வை வெளியாவதற்கு முன்பே ரூ.100 கோடியை அள்ளிய அஜித் பட தயாரிப்பாளர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளருமான போனி கபூர் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளார். இதில் பல பிளாக் பர்ஸ்டர் திரைப்படங்களும் அடங்கும்.


இவர் இதுவரை ஹிந்தி திரைப்படங்களை தான் பெரிதும் தயாரித்து உள்ளார்.  தற்போது அடுத்ததாக போனி கபூர் தமிழ் திரையுலகில் கால் பதித்து உள்ளார். நம்ம தல அஜித்  நடிக்கும் "நேர் கொண்ட பார்வை" என்ற திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறார்.  ஏற்கனவே இந்த திரைப்படம் ஹிந்தியில் "பிங்க்" என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.  இப்போது இதனை தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் எடுக்கிறார் இயக்குனர் வினோத். 

இந்த திரைப்படத்தில் ஷர்தா கபூர், அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையிடப்படும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கபட்டு உள்ளது.  நேர் கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் முன்னரே போனி கபூர் தயாரித்த "மாம்" என்ற படத்திற்கு, ரூ.100 கோடி வசூல் ஆனது.  இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுதான் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் ஆகும்.

இந்த படமானது சமீபத்தில் சீனாவில் திரையிடப்பட்டது.  சீனாவில் மட்டுமே இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றதாக போனி கபூர் சமூக வலைதளத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு இட்டு இருந்தார். இது இவர் தயாரிப்பில் வெளிவந்த 300 -வது திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கான இசையை நமது இசைப்புயல் A.R. ரஹ்மான் அமைத்து உள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.   

சீனாவில் இந்த திரை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் நேர் கொண்ட பார்வை திரைப்படமும் சீனாவில் வெளியிட படும் என்று போனி கபூர் தெரிவித்து உள்ளார்.