நடிகர் - நடிகைகளுக்கு செக்ஸ் கற்றுக் கொடுக்கும் இளம் பெண் மணிஷா!

பாலிவுட் வரலாற்றில் முதல்முறையாக, நெருக்கமான காட்சிகளுக்கு சூப்பர்வைசர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் படுக்கையறை காட்சிகள் உள்ளிட்ட கிளுகிளுப்பான  காட்சிகளை மேற்பார்வையிட ஒரு சூப்பர்வைசர் இருப்பார். அவர், காட்சியின் தன்மை பற்றி நேரில் ஆய்வு செய்வார். காட்சிகளில் நடிகர், நடிகையர் வரம்பு மீறி எங்கேனும் நடந்துகொண்டால், உடனடியாக, அதனை நிராகரிப்பதாக, அந்த சூப்பர்வைசர் அறிவிப்பார்.

இதன்படி, குறிப்பிட்ட காட்சியை நீக்கிவிட்டு, மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படும். இதன்மூலமாக, தேவையற்ற பாலியல் சீண்டல்கள் இடம்பெறாமல் தடுக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த முறையை பின்பற்றி, தற்போது பாலிவுட் நடிகை செலினா ஜெய்ட்லி, தனக்கு நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கான ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளார். பாலிவுட் வரலாற்றிலேயே இப்படி ஒரு ஊழியர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையை மணிஷா பாஷூ பெறுகிறார். இவர், செலினா ஜெய்ட்லி நடிக்கும் சீசன்ஸ் கிரீட்டிங்ஸ் படத்திற்காக, இயக்குனர் ராம் கமல் முகர்ஜியால், நெருக்கமான காட்சிகளுக்கான சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுபற்றி மணிஷா கூறும்போது, ''கடந்த 5 ஆண்டுகளாக, நான் மும்பை, கொல்கத்தாவில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நடனக்கலைஞராக பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில், எனக்கு, அசோசியேட் டைரக்டர் சாய்கத் தாஸ் உதவியுடன், பாலிவுட்டின் முதல் நெருக்கமான காட்சிகளுக்கு சூப்பர்வைசராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார். அது சரி இனி செக்ஸ் காட்சிகள் எல்லாம் ஒழுங்காக பிரச்சனை இல்லாமல் வந்தால் சரி தான்.