தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..! ஆனாலும் நீச்சல் குளத்தில் சுதந்திரமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை! யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி தோலகியா தனது இரண்டு மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள நிலையிலும், கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் சுதந்திரமாக குளிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சிறுவயது முதலே மாடலிங் துறையில் நடித்து வந்த நடிகை ஊர்வசி தோலகியா, தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து கர் ஏக் மந்திர், கபி சாத்தன் கபி, கஹின் டோ ஓகா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மூலம் மிகப் பிரபலமான நபராக வலம் வந்தார். தன்னுடைய பதினேழாவது வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகை ஊர்வசி, இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். பின்னர் கணவர் இல்லாமல் தனி ஆளாய் அவரது இரண்டு மகன்களையும் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் வெற்றியாளராக திகழ்ந்தார். இதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நபராக வலம் வர ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகாந்தா சீரியலிலும் நடித்து புகழ் பெற்றார். தனது நடிப்பின் திறமையால் புகழின் உச்சிக்கே சென்றுள்ள நடிகை ஊர்வசி, எப்பொழுதும் மிதமிஞ்சிய கவர்ச்சியை கையாளுவதில் வல்லவர். இவர் எப்பொழுதும் நீச்சல் குளத்தில் பிகினி உடைகளுடன் கூடிய புகைப் படங்களை வெளியிடுவதை தனது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகை ஊர்வசி தன்னுடைய இரண்டு மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த நிலையிலும், நீச்சல் குளத்தில்  கவர்ச்சி உடையுடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 

நடிகை ஊர்வசி தோலகியா புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை ஊர்வசி தோலக்கியா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில்  தீயாக பரவி வருகிறது.