இடம் கொடுக்குறார்னு அங்கேயா ஏறுவது? 27 வயது காதலன் மீது ஏறி 44 வயது நடிகை செய்த செயல்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சுஷ்மிதாசென் தன்னுடைய காதலனுடன் இணைந்து உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக இந்த கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடெங்கிலும் உள்ள உடற்பயிற்சி கூடம் , ஷாப்பிங் மால்கள் , டாஸ்மாக் கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஜிம் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் நடிகர்-நடிகைகள் அவரவர் தங்களுடைய வீடுகளிலேயே உடற்பயிற்சி செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையான சுஷ்மிதாசென் தன்னுடைய வீட்டில் தொடர்ந்து பல உடற்பயிற்சிகளை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தையும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் 44 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 27 வயதாகும் தன்னுடைய காதலன் ரோமன் ஷால் உடன் இணைந்து உடற்பயிற்சி செய்து வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பதிவில் நடிகை சுஷ்மிதாசென் , ரோமன் இன் தொடைகளின் மேல் ஏறி நின்று கொண்டு உடற்பயிற்சி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய காதலனான ரோமனுக்கு "ஐ லவ் யூ மை டஃப் கை" என்று கேப்ஷனாக பதிவிட்டிருக்கிறார். 

நடிகை சுஷ்மிதா செனை போலவே அவரது காதலன் ரோமனும், இதே வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, மை ஸ்ட்ரென்த் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், " என்னதான் இடம் கொடுக்குறார்னு அங்கேயா ஏறுவது? " என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது நடிகை சுஷ்மிதாசென் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

இதேபோல் நடிகை சுஷ்மிதாசென் கடந்த வாரமும் தன்னுடைய மகள்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடன் இணைந்து ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.