பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான மான்வி காக்ரு தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை பற்றி தற்போது மனம் திறந்திருக்கிறார்.
படுக்கைக்கு வந்தால் சம்பளம் கூடும்..! ஊரடங்கு சமயத்தில் பிரபல நடிகை உடைத்த ரகசியம்!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மான்வி காக்ரு. வெப் சீரிஸில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ள கூறியதைப் பற்றி அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதாவது சமீபத்தில் நடிகை மான்விக்கு அறியப்படாத எண்ணில் இருந்து போன் வந்துள்ளது.
அந்த போனில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கும் தயாரிப்பாளர் இருந்திருக்கிறார். அவர் தன்னுடைய வெப் சீரிஸில் மீதமிருக்கும் நான்கு எபிசோடுகளை நடித்த தருமாறு நடிகை மான்வியை கேட்டிருக்கிறார். அதற்கு தன்னுடைய பட்ஜெட் என்ன என்று அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதனைக் கேட்ட நடிகை மான்வி முதலில் எனக்கு கதையைப் பற்றி சொல்லுங்கள் அதில் எனக்கு ஆர்வம் இருந்தால் நிச்சயம் இதில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த வெப்சீரிஸ் இன் பட்ஜெட் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நடிகை மான்வி.
அதற்கு தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு நடிகை மான்வி இந்த தொகை இதற்கு மிகவும் குறைவானது என்றும் இதனை தாங்கள் உயர்த்தி தந்தால் இதில் நடிக்கத் தான் ஒப்புக்கொள்வதாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட தயாரிப்பாளர், நான் இதே போல் மூன்று மடங்கு சம்பளத்தை உங்களுக்கு உயர்த்தி தர தயாராக இருக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட நடிகை மான்வி ஆத்திரமடைந்து இருக்கிறார். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை இவ்வாறு நீங்கள் கேட்பீர்கள் என்று மிகவும் கடுமையாக திட்டி இருக்கிறார். மேலும் அந்த தயாரிப்பாளரிடம் நடிகை மான்வி இதுபோன்ற அணுகுமுறையில் என்னிடம் வந்தீர்கள் என்றால் நிச்சயம் நான் போலீசிடம் போவேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை பற்றி நடிகை மான்வி சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் இவர், சித்தி என்ற வெப்சைட்டில் உள்ள இதற்கு முன்பாக நடித்திருக்கிறார் இவர் நடித்த பல வெப்சைட்டுகள் அமேசான் பிரைம் வெளிவந்துள்ளன இதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.