7 பெட்ரூம்களுடன் சீனியர் நடிகை வாங்கிய பிரமாண்ட வீடு! ஏன்னு கேட்டுடாதீங்க..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.


இந்தி சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்த நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் நடிப்பதற்கு தயாராகி உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகையால் பெரும்பான்மையான நேரம் அவர் அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த ஜோடி தங்களுடைய திருமண நாளை கொண்டாட உள்ளது. இந்த திருமண நாளை கொண்டாடுவதற்காக நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் ரூ.144  கோடி மதிப்பில் புதிய பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

20 ஆயிரம் சதுரடி பரப்பில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் மொத்தம் ஏழு படுக்கை அறைகளும் பதினோரு குளியல் அறைகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ரூபாய் மதிப்பில் சுமார் ரூபாய் 20 மில்லியன் டாலர் கொடுத்து இந்த வீட்டை நடிகை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டினுள் நீச்சல் குளம் , ரெஸ்டாரன்ட் , பௌலிங் அரங்கம், சினிமா தியேட்டர், உடற்பயிற்சி மையம், கூடைப்பந்து விளையாடுவதற்கான அரங்கம் என அனைத்துவித வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது பிரியங்கா சோப்ராவின் இந்த பிரம்மாண்டமான வீடு பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.