ரூ.30 கோடி பணம்..! 4 படுக்கை அறைகளுடன் வீடு..! பிரபல நடிகரை பிரிந்து செல்ல செட்டில்மென்ட் கேட்கும் மனைவி?

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக் இடமிருந்து அவரது இரண்டாவது மனைவி ஆலியா பிரிந்து செல்ல செட்டில்மெண்ட்டாக ரூபாய் 30 கோடி பணம், நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஆகியவற்றை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சமீப நாட்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான ஆலியா ஆகியோரின் விவகாரத்து பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆலியா விற்கும் நவாசுதீன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு தான் இவர்கள் பிரிவிற்கு முக்கிய காரணம் என்று ஆலியாவே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மூலமாக கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் ஆலியாவும் பியூஷ் பாண்டேவும் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. இதனையடுத்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலியா சமீபத்தில் ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவங்கி அறிமுகமான அவர், புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது ஆலியா வெளியிட்டு இருந்த அந்த பதிவில், எனக்கு யாருடனும் எந்த உறவும் கிடையாது.. இது குறித்து வெளியாகும் அனைத்து செய்திகளும் முற்றிலும் பொய்யானவை களாகும்.. மற்ற நபர்களை காப்பாற்றுவதற்காக என் பெயரை கெடுக்கும் செயலில் யாரும் ஈடுபடாதீர்கள். பணத்தால் ஒரு போதும் உண்மையை விலைக்கு வாங்க முடியாது எனவும் அவர் காட்டமாக பதிவை வெளியிட்டு தன் பக்க நியாயத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.

தற்போது மீண்டும் ஆலியா தன்னுடைய கணவரிடம், 30 கோடி ரூபாய் பணம் மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஆகியவற்றை ஜீவனாம்சமாக கேட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அதில் 10 கோடி ரூபாய் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், மற்றொரு 10 கோடி ரூபாய் , பராமரிப்பு செலவிற்கும் , மேலும் 10 கோடி ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்காகவும் கேட்டுள்ளதாக ஆலியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பணத்தோடு சேர்த்து தன்னுடைய குழந்தைகளின் கஸ்ட்டடியையும் தனக்கு வேண்டுமென ஆலியா முறையிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.