4 பேரின் உடல்களும் அழுகிக் கொண்டிருக்கின்றன! சவக்கிடங்கில் பெண் டாக்டர் கொலையாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்!டாக்டர் வெளியிட்ட பகீர் தகவல்!

தெலங்கானா கால்நடை மருத்துவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் அழுகி விடும் என்று மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


தெலங்கானா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 26 வயதான கால்நடை மருத்துவர் 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அடுத்த வாரத்திலேயே 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது நாட்டின் பல தரப்பட்ட மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் மருத்துவமனை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் உடல்கள் தற்போது டெல்லியில் உள்ள காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காந்தி மருத்துவமனையின் தடவியல் மருத்துவத்துறையின் டீனான ஷ்ரவன் குமார் நீதிமன்றத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதாவது "குற்றவாளிகள் 4 பேரின் உடல்களும் இன்னும் சில நாட்களுக்கு அப்படியே வைக்கப்பட்டால் அழுகிவிடும். ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலில் குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க இயலாது. 

மிக விரைவிலேயே பிணங்கள் அழுகி விடும் நிலையிலுள்ளன. ஆகையால் நீதிமன்றம் விரைந்து முடிவெடுத்து பிணங்களை என்ன செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இதற்கு ஒரே ஒரு தீர்வு "எம்பாமிங்" முறைதான். ஆனால் அது செய்வதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும். ஆகையால் காத்திருக்கிறோம். எம்பாமிங் முறை செய்யப்பட்டால் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளும் மாறுவதற்கு வாய்ப்புள்ளன" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது தற்போது நீதிமன்றத்திற்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.