சிம்பு இடத்தில் புளு சட்டை மாறன்..! மாநாடு தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு! திரையுலகில் பரபரப்பு!

ஏதேனும் ஒரு புதிய திரைப்படம் திரையிடப்பட்டால் போதும் உடனே அதனை விமர்சனம் செய்ய ஒரு படையே கிளம்பி விடும். அந்த வகையில் யூ டியூப் மூலம் விமர்சனம் செய்வதில் பிரபலமாக திகழ்பவர் ப்ளூ சட்டை மாறன்.


ப்ளூ சட்டை மாறன் பொதுவாகவே எந்த திரைப்படம் வந்தாலும் அது எவ்வளவு பெரிய நடிகர் நடித்து இருந்தாலும் எவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் அதனுடைய நிறைகளை கூறுவதைவிட அதன் குறைகளை அதிகமாக சுட்டிக்காட்டும் வழக்கம் கொண்டவர். இவர் எப்போதும் மிகப் பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியே வந்தாலும் கூட அதற்கான நெகட்டிவ் கருத்துக்களை தான் அதிகமாக கூறுவார் .

இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்று தான் கூற வேண்டும். இதனால் அவருக்கு பல முறை கொலை மிரட்டல்கள் கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீண்டகாலமாக நீங்களே ஒரு புதிய திரைப்படத்தை எடுங்கள் என்று கூறிவந்தனர். வெறும் பேச்சு வார்த்தையாக இருந்த இந்த விஷயத்தை செயலாக மாற்றியுள்ளார் மாறன் . அதாவது தற்போது அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.

மாறன் எடுக்கப் போகும் இந்த புதிய திரைப்படத்தை வீ ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். முன்னதாக சுரேஷ் காமாட்சி நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை தயாரிக்க இருந்தார். ஆனால் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது மாறன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தை இயக்க தயாரிக்க ஆர்வமாக காத்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி. மாறன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை ஆனது தற்போது நடைபெற்றுள்ளது . இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் தொடங்கும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.