திருமணம் ஆகாத பார்வையற்ற பெண்ணுக்கு தீராத வயிற்று வலி..! ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த பகீர்! 8 மாத ரகசியம் உடைந்தது! என்ன தெரியுமா?

பார்வை குறைபாடுள்ள இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் லால்குடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட புதூர் உத்தமனூர் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மனைவி 10 வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

மூத்த மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆதலால் பிற இரண்டு பிள்ளைகளுக்கும் மணி திருமணம் செய்து வைத்துள்ளார். மூத்த மகளுக்கு 35 வயதாக இருப்பினும், திருமணம் செய்து வைக்காமல் வீட்டிலேயே கவனித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களுடைய வீட்டிற்கு அருகே சிவகுமார் என்ற கூலித்தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். அப்போதிலிருந்தே சிவகுமார் கண் பார்வையிழந்த பெண்ணிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை தகாத உறவில் ஈடுபட்டதால் கண்பார்வை இழந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதனை வெளியே தெரிவிக்காமல் இருந்து அவருக்கு திடீரென்று ஒரு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர் ஒருவருடன் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னால் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், சிவகுமார் தான் தன்னை பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் சிவகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.