கல்வி, செல்வம் , வீரம் போன்றவற்றை அள்ளித்தரும் நவராத்திரியை கொண்டாடும் வழிமுறைகள்

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்து வரும் பிரதமை இதிலிருந்து நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம்.


பிரதமையில் துவங்கி அடுத்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழா கோலாகலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது போல அவ ராத்திரியில் அம்பாளை வழிபடுவது வழக்கமாகும். நவராத்திரி கொண்டாடப்படும் 9 நாட்களில் முதல் மூன்று நாட்கள் வீரத்திற்கும் அடுத்த மூன்று நாட்கள் செல்வதற்கும் கடைசி மூன்று நாட்கள் கல்விக்கும் உகந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஒன்பது நாட்களிலும் அம்மனுக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் ஒன்பது விதமான பூஜைகள் ஒன்பது விதமான பூக்களால் அலங்காரம் செய்து ,உணவு பொருட்களை நிவேதனம் செய்து பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அதை பிரசாதமாக வழங்குவது வழக்கமாகும். ஒருவர் இம்மையிலும் மறுமையிலும் நலன் பெற வேண்டும் என எண்ணினால் அவர்கள் அவரவர் நவராத்திரி விரதம் இருப்பது அவசியம். 

நவராத்திரியில் ஒன்பது நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் விரதம் இருந்தால் மட்டும் போதும் ஏனெனில் கடைசி மூன்று நாட்கள் விரதம் இருப்பவர்களுக்கு ஒன்பது நாளும் விரதம் இருந்த பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆகவே நவராத்திரி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களும் நம் இல்லத்தில் கிடைக்க அம்பாளை பிரார்த்திப்போம்.