38 வயது கள்ளக்காதலனுடன் 40 வயது கள்ளக் காதலி எடுத்த பகீர் முடிவு..! மின் கோபுரத்தில் சடலமாக தொங்கிய பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

மின்கம்பத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அருகே ஆரணி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள அரையாளம் காலனி பகுதியில் பொன்னன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 38. இவருடைய மனைவியின் பெயர் உமா. உமாவின் வயது 40.  தம்பதியினருக்கு மொத்தம் 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இதே பகுதியில் மூர்த்தி என்பவர் பெயராக வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேன்மொழி. இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. மூர்த்தி அடிக்கடி வெளியூருக்கு சென்று வேலை பார்ப்பார். 

அப்போது தேன்மொழிக்கும், பொண்னணுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்து உள்ளனர்.

இதனிடையே சமீபகாலமாக இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை  ஏற்பட்டு வந்துள்ளது. இருவராலும் இதனை வெளியில் கூற இயலவில்லை. சில வாரங்கள் கழித்து இருவரது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இவர்களது வீட்டிற்கு அருகே 60 அடி உயரத்தில் மின்கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கோபுரத்தில் 10 அடி  உயரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவம் அறிந்த இருவரது உறவினரும் விரைந்து சென்று அவர்களுடைய பிணங்களை கீழே இறக்கினர். காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கேட்டனர்.  

ஆனால் இருவரது குடும்பத்தாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.